முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, மீண்டும் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக, சந்தர்ப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் எம்.பி ஒருவரே ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டு எம்.பியாக இருக்கும் ஐ.தே.க எம்.பி., ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவரும், விசுவாசமானவரும் ஆவார்.
மைத்திரி எம்.பி ஆனதன் பின்னர், அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பார் என்றும், அதற்கான முன்னேற்பாடாகவே, இந்த காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அறியமுடிகின்றது.
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.
கௌரவ (டாக்டர்) (திருமதி) அனோமா கமகே, பா.உ.
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர், பா.உ.
கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பா.உ.
கௌரவ எம்.எஸ். தெளபீக், பா.உ.
கௌரவ முஹம்மது நசீர், பா.உ.
கௌரவ (கலாநிதி) சீ.மு. முகம்மட் இஸ்மாயில், பா.உ.
கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன, பா.உ.
கௌரவ மலிக் சமரவிக்ரம, பா.உ.
கௌரவ திலக் மாரபன, பா.உ.
கௌரவ சிறினால் டி மெல், பா.உ.
உள்ளிட்டவர்களே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தேசியப்பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.