புதிய சபாநாயகராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நானயக்கார நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் வாசுதேவ நானயக்காரவை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர்.
பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினரான வாசுதேவ நானயக்காரா, பாராளுமன்றத்தில் பொருளாதார மேம்பாட்டுக்கான துறை மேற்பார்வைக் குழு, பொதுக் கணக்குக் குழு, வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு, தேசிய ஒருங்கிணைப்புக்கான தேசிய குழு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.