கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதற்கு, புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், குப்பை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, நிர்வாக சீர்கேடு, நிதித்திரட்டுவதில் ஏற்பட்டிருக்கும் நிதி முகாமைத்துவ குழப்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் என்றும், அதுதொடர்பில் உரிய பதில் எதுவும், ரோசியிடமிருந்து கிடைக்கவில்லை என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே, மாநகர சபையின் நிர்வாகத்தை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் உயர்மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது என அந்த தகவல்கள் தெரிவித்தன.