web log free
May 09, 2025

காளான் சாப்பிடுவதில் கவனம்

இடி, மின்னல் என்பதனால், காளான்கள் கண்ட இடங்களில் முளைக்கும். 

அவ்வாறு முளைக்கும் காளான்களை, பலரும் தங்களுடைய உணவுக்கு  எடுத்து கொள்வர். அதன்போது மிகவும் கவனமாக இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காட்டில் முளைத்த காளானை உட்கொண்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட மூவர், பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்தே, மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம், மீகஹகிவுல பிரதேத்தில் இடம்பெற்றுள்ளது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டோரில், 69 வயதான பெண்ணும் அடங்குகின்றார். ஏனைய இருவரும், 75 மற்றும் 45 வயதுகளை உடையவர்கள் ஆவார்.

காட்டிலிருந்து பிடுங்கிக்கொண்டு வந்த அந்த காளானை சமைத்து, உட்கொண்டதன் பின்னர், அவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி, குமட்டல் மற்றும் சோர்வு, மயக்கம் ஏற்பட்டுள்ளன. அதனையடுத்தே, அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd