எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை, இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள், கையொப்பம் இட்டு பழகுவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டனர். அவ்வாறான நிலைமை, புதிய அரசாங்கத்தின் கீழ் இருக்காது என, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய அமைச்சரவைக்கே இவ்வாறு தெரிவித்த அவர், இராஜாங்க அமைச்சர்களும் தங்களுடைய கடமைகளை முன்னெடுக்கும் வகையில், பொறுப்புகளை ஒதுக்குமாறு அறிவுறுத்தினார்.
நாங்கள், அமைச்சரவையை 15க்கு மட்டுப்படுத்தினோம். ஒவ்வொரு அமைச்சரின் கீழும், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆகையால், இராஜாங்க அமைச்சர்களும் தங்களுடைய பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன்பிருந்த இராஜாங்க அமைச்சர்கள், தங்களுடைய கையொப்பங்களை இட்டு, பழகிக்கொண்டிருந்தனர். அந்த நிலைமை இந்த புதிய அரசாங்கத்தில் மாறவேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய அறிவுரை வழங்கினார்.