web log free
May 03, 2024

புது வருடத்துக்குப் பின் பொதுத் தேர்தல்

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ், முதலாவது பொதுத் தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நடத்தப்பட்டவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் புத்தாண்டுக்குப் பின்னர், மே மாதம் நிறைவுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 5 வருடங்களாகும். எனினும், அரசியமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதி தனதுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைவாக, நான்கரை வருடங்களுக்குப் பின்னர், நடப்பு பாராளுமன்றத்தை கலைக்கலாம்.

அதனடிப்படையில், மார்ச் மாதம் 1ஆம் திகதிக்குப் பின்னர், பாராளுமன்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது தலைமையில், புதிய அமைச்சரவை நேற்று (22) நியமித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அரசியலமைப்பில் தனக்கிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம், முதலாவது சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதாக அறிவித்திருந்தார்.

அப்படியாயின், 2020 மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் அல்லது மே மாதம், பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.