ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால், அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக, பொதுமக்கள் பாதுகாப்புக்காக, நாடு பூராவும் சகல மாவட்டங்களிலும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் இருப்பர்.
மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரமே, ஜனாதிபதி இந்த அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், மக்கள் பாதுகாப்புக்காகவும் தேசிய பாதுகாப்புக்காகவும் இவ்வாறு முப்படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.