இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, எதிர்வரும் 29ஆம் திகதியன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், அவருடைய முதலாவது விஜயம் இதுவாகும்.
இந்நிலையில், தமது நாட்டுக்கும் விஜயம் செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபயவுக்கு மட்டுமன்றி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், புதியப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்று, தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைத்திருந்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, 10 பேர் அடங்கிய தூதுக்குழுவையே அழைத்துச் செல்லவுள்ளார்.
அதில், நிதி, ஜனாதிபதி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்கள் அடங்குவர்.
அமைச்சர்கள் எவரையும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைத்துச் செல்லமாட்டார் என அறியமுடிகின்றது.