web log free
September 08, 2024

ஐ.தே.க பின்வரிசை எம்.பிக்கள் கடும் தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில், எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் முறையான தீர்மானமொன்று எட்டப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்பார்க்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்திவருகின்றனர். 

 

க்ட்சித் தலைவரிடமும் இந்தக் கோரிக்கையை பின்வரிசை எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர். 

கட்சியின் தலைமைப்பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கவில்லையெனில், அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடாமல் விடுவதற்கு, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

 

“சிற்சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அவை தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்போம். மக்கள் எங்களுடன் உள்ளனர். எங்கள் தொடர்பில் மக்களே இறுதித் தீர்மானத்தை எடுப்பர். கட்சித் தலைவரின் முடிவின் பிரகாரம், அடுத்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டிடுவதா? அல்லது தனித்து களமிறங்குவதால், என்பது தொடர்பிலான எங்களுடைய முடிவு தங்கியுள்ளது. நாங்கள் எதிர்பார்ப்பது, கிடைக்கவில்லையெனில், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில், எவ்விதமான பிரயோசனமும் இல்லை” என்றும் பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.