web log free
February 04, 2026

ஜனாதிபதி செயலக பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர்

ஜனாதிபதி பணியாட் தொகுதியின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ.எகடகொடவெல நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் பலவற்றில் அனுபவம் வாயந்த அதிகாரியாக அவர், கண்டி வித்தியார்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். 

1971 ஆம் ஆண்டு, இலங்கை இராணுவத்தில் இணைந்த அவர், 33 வருடங்களுக்கு மேல், இலங்கை இராணுவரத்தின் பணியாற்றியிருந்தார்.

நான்கு வருடங்களுக்கு மேலாக, காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருந்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றினார். 

 

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ.எகடொவெல, 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகள், வரையறுக்கப்பட்ட ரக்னா லங்க நிறுவனத்தின் பிரதான அதிகாரியாகவும் பணியாற்றினார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd