web log free
September 08, 2024

“காலை 5.30 இலிருந்து சுத்தம் செய்யவும்”

நாடளாவிய ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கும் செயற்றிட்டம் நேற்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்ட மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதற்கான பொலிஸ் பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோரை தௌிவூட்டும் செயற்றிட்டமும் பொலிஸ் திணைக்களத்தினால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நகரங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கை, ஒவ்வொருநாளும் காலை 5.30 இலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், தனியார் நிறுவனங்கள் இரண்டுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.