web log free
September 08, 2024

விட்டு கொடுத்து விடை பெறுகிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

2010 மற்றும் 2015 ஆம் வருடங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைக்கு அமையவே வேட்பாளராக நிறுத்தியதாகவும், இம்முறை பெரும்பான்மையினரின் கோரிக்கைக்கு அமையவே முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சி இரண்டா பிளவு படுவதை தடுக்கும் வகையிலேயே மேற்கண்ட தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார் என அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

 

கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

பௌத்த சிந்தனை தொடர்பில் எங்களுடைய அரசியல்வாதிகள் சிலரின் கூற்றினால், சிங்கள-பௌத்த வாக்குகள் சிதைத்துபோயின். எங்களுடைய தவறுகளை திருத்திக்கொண்டு, தேரர்களுடன் முன்னோக்கி பயணிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 26 November 2019 16:24