கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் வடக்கு மாகாண ஆளுநராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிந்தது.
ஜனாதிபதி, இந்திய விஜயத்தை மேற்கொள்ள முன்னர் இந்த ஆளுனர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது.
முன்னதாக வடக்கு ஆளுநராக நியமனம் என்ற செய்திகளை முரளிதரன் மறுத்திருந்தார். அதேபோல அப்படியான எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு முரளியை அழைத்துப் பேசிய ஜனாதிபதி கோட்டாபய, வடக்கு ஆளுநர் பதவியை ஏற்குமாறு கேட்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து அந்தப் பதவியை முரளி ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த நியமனங்கள் இறுதி செய்யப்பட்டன.