எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சி பதவி ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணிலும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தும் செயற்பட ஏற்பாடாகியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய சந்திப்பு மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐ.தே.க தலைவர் ரணில் , பிரதித் தலைவர் சஜித் ஆகியோர் நடத்திய சந்திப்புகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த முடிவு சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.