பொலிஸாருக்கு எதிராக இன்று (25) முதல் இணையத்தளத்தின் ஊடாக முறையிடமுடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான விளக்கத்தை அளிப்பதற்கு, தேவையான வசதிகள், இணையத்தளத்தில் உள்ளன என, அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜி.எச். மனதுங்க தெரிவித்தார்.
முறைப்பாடுகளை http://www.npc.gov.lk/ என்ற இணையத்தளத்துக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மக்களால் செய்யப்படும் முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் பக்கச்சார்ப்பான விசாரணைக்ள தொடர்பில், பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான முறைப்பாடுகள் வருடத்துக்கு 500 கிடைக்கின்றன என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை செய்வதற்கு, மாவட்ட மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகளிடமும் முறைப்பாடுகளை கையளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.