மூவருக்கு அமைச்சுப் பதவிகளை கொடுத்தமைக்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், அரசாங்கத்தினால் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவறானதாகும் என கடமைகளுக்கான கலந்துரையாடல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த நபர்கள்,பாராளுமன்றத்துக்கு பிரவேசித்திருக்கும் முறைமையே தவறாதாகும் என, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கேவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள, எஸ்.பீ.திஸாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமத்திபால ஆகியோருக்கு எதிராகவே கேவிந்து குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முறைமையே தவறானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.