web log free
November 28, 2024

10 நாட்களில் மேற்கொண்ட 15 தீர்மானங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மக்களின் பாராட்டு…..

 

  1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்.
  2. 15% சதவீதமாகக் காணப்பட்ட VAT வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல்.
  3. தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல்.
  4. அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல்.
  5. அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.
  6. இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல்.
  7. சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம்.
  8. 9 மாகாணங்களினதும் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை.
  9. பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல்.
  10. இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எமது நாட்டிற்கு வருகைத் தந்து, எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.
  11. ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல்.
  12. கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல்.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd