web log free
July 04, 2025

உண்ணா விரதத்தை கைவிட்டார்- வீடியோ இணைப்பு

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பாக, தென்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற மேஜருமான அஜித் பிரசன்னவால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப்  போராட்டம் கைவிடப்பட்டது. 

சுவிட்சர்லாந்து தூதரகப் பெண் பணியாளரை கடத்தி, அச்சுறுத்தி, விசாரிக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். ஆகையால், பொலிஸில் ஆஜராகி முறைப்பாடு செய்யுமாறு வலியுறுத்தியே அந்த நபர், போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே, இந்தப் போராட்டத்தை அவர் கைவிட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd