web log free
May 11, 2025

யாழில் இராணுவம் ஒரே இரவில் அதிரடி

யாழ். பொன்னாலை பி 75 பிரதான வீதியில் சேதமடைந்த பாலமொன்றை ஒரே இரவில் இராணுவத்தினர் சரி செய்துள்ளனர்.

30 அடி நீலமும், 15 அடி அகலமும் கொண்ட குறித்த பாலம் நேற்று(06) பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் உடைந்ததால், போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

இதுத் தொடர்பில் யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்த அவர், ஒரே இரவில் இராணுவத்தை வைத்துப் பாலத்தை சரி செய்துள்ளார்.

Last modified on Saturday, 07 December 2019 11:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd