நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் வெகுவாக பேசப்பட்டது. எனினும், அந்த நிலைமைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான அரசியல் சூழல் இரத்து செய்யப்பட்டுள்ளது உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. இதனால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கலந்துரையாடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக கிடைத்த ஜனநாயகம், சுயாதீன ஆணைக்குழுகளை பாதுகாத்தல் ஆகிய முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் சுனில் ஹந்துநெத்தி எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.