web log free
May 11, 2025

ஐ.ம.சு.முவின் வெற்றிடத்துக்கு ஐ.தே.க உறுப்பினர்

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் மரணம் காரணமாக, 8 ஆவது பாராளுமன்றத்தில் டிசம்பர் 04 ஆம் திகதியிலிருந்து வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக திசாநாயக்க தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் பிரிவு 64 (1) ன் படி இந்த அறிவிப்பு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியாவுக்கு பாராளுமன்ற பொதுச்செயலாளர் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையகம் அடுத்த வேட்பாளர் குறித்த தகவல்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலிலிருந்து அடுத்து உள்ளவர் பற்றிய தகவலைத் திரட்டியுள்ளது. அதன் பின்னர் தேர்தல் ஆணையகம் குறித்த நபரின் பெயரை வர்த்தமானி மூலம் வெளியிடும்.

எதுஎவ்வாறாயினும், விருப்பு வாக்குக்கேற்ப 7 ஆவது இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிவித்திகல தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் அருணா லியனகேயின் பெயரே உள்ளது. அதனால் பெரும்பாலும் அவர் பாராளும்றத்திற்குத் தெரிவாவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd