web log free
April 30, 2024

சுவிஸ் பெண் பணியாளருக்கு வைத்திய பரிசோனை

கடத்தி, தாக்குதல் நடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படார் என கூறப்படும், சுவிஸ் தூதரக பெண் பணியாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கொழும்பு பிரான நீதவான் நீதிமன்றம், கடந்த 3ஆம் திகதி விடுத்திருந்த கட்டளைக்கு அமையவே, பானியா பென்ஷ்டர் என்பவர், சுவிஸ் தூதரக அதிகாரியுடன் சென்று, நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் சென்ற அவர், இரண்டு 7 மணிக்கு, திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேற்படி பெண் பணியாளர், கடந்த 25ஆம் திகதியன்று, சென் பிரிஜட் கொன்வெட்டுக்கு அருகில், வெள்ளைநிற வாகனமொன்றில் வந்த ஐவர், கடத்தி சென்றனர் என, தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியினால், கடந்த 27ஆம் திகதியன்று, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. 

 

 

பெண் பணியாளரை கடத்தி சென்று, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, நிஷாந்த சில்வா (குற்றப்புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரி) எவ்வாறு விசா வழங்கப்பட்டது என்பது தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், தன்னுடைய கையடக்க தொலைபேசியையும் அபகரித்து, அதனை பரிசோதனைக்கு உட்படுத்தினர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. 

ஐந்து மணிநேரம் வாக்குமூலம் அளித்த அந்த பெண் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டு, வைத்திய பரிசோனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு குறித்த விசாரணை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்ற (09) அழைக்கப்படவுள்ளது.