பாஸ்போட் (கடவுச்சீட்டு) பெறுவதற்காக பெண்கள் புகைப்படங்களை எடுக்கும் போது, நெற்றியில் பொட்டு வைப்பதற்கும், முகத்துக்கு ஆகக் கூடுதலான அலங்காரத்தை செய்வதற்கு, குடிவரவு- குடியகல்வு திணைக்களம் தடைவிதித்துள்ளது. அது தொடர்பில் சட்டமொன்றும் கொண்டுவரப்படவுள்ளது.
அந்த திணைக்களத்தின் செயற்பாட்டுக்கு இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்து கலாச்சாரத்தின் பிரகாரம், இந்து பெண்கள், தன்னுடைய கணவன் இறந்ததன் பின்னரே, நெற்றியில் பொட்டு வைத்துகொள்ள மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வ தேச சட்டத்தின் பிரகாரம், புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் போது, இந்த சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.