web log free
March 24, 2026

வி.ஐ.பிகளுக்கும் ஆப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வந்துசெல்லும் வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகள் இனி சாதாரண பயணிகள் செல்லும் வழியில் சென்றுவரவேண்டுமென்றும் அப்படி வி ஐ பி வாசலை பயன்படுத்த விரும்புவோர் தேவைப்படின் ஆயிரம் டொலரை செலுத்தி அதனூடாக செல்லலாமென தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் வெளிநாட்டில் இருந்து வரும் முக்கிய அதிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் விமான நிலைய விசேட பிரமுகர்களுக்கான வாயிலில் வந்துசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சாதாரண பிரமுகர்கள் பயன்படுத்தும் வாயிலூடாகவே சென்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd