web log free
June 24, 2026

கலுவுக்கு மரண தண்டனை

25.77 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முதியன்சலாகே துஷார என்ற கலு துஷாரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 12 திகதி சேதவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் 59 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இந்த பிரதிவாதி கைது செய்யப்பட்டிருந்தார்.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார்.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டுகளுக்கு வேறு வேறாக மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளா​ர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd