உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பினார்.
நேற்றிரவு 11.16 மணி அளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ 468 ரக விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
சிங்கப்பூருக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தில், இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ், சிங்கபூருக்கான விஜயங்களை நிறைவுசெய்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெப்ரவரிமாதம் நடுப்பகுதியில் தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.