ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக, பல்வேறான தரப்பினர் பங்குபற்றலுடன் விசேட குழுவொன்றை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
கட்சியில் சிலரின் கருத்துகளுக்கு மட்டும் செவிசாய்க்க முடியாது. அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கியவாறு பயணிக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ்காரிவசம் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.