எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாடுபடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற, சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பங்கேற்றிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவருக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், அடுத்த தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க வேண்டியது, கட்டாய பொறுப்பாகும் என்றார்.