அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
அவர், சுகாதார அமைச்சராக இருந்த போது அமைச்சுக்கு உரித்துடையை 33 இலட்சம் ரூபாவை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.