web log free
May 03, 2024

தங்கமே எனக் கூறிய ஓ.ஐ.சி பதவியிழந்தார்

மிரிஹானா பொலிஸ் சிறப்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் (OIC) ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் பேரில் வழக்கு தொடரப்பட உள்ளது.

இந்த அதிகாரிக்கு எதிராக ஆதாரபூர்வமான சான்றுகள் இருப்பதாக மேல் மாகாண தெற் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வசந்த விக்கிரமசிங்க அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ஷ்ட இலாபச் சீட்டொன்றில் வெற்றிபெற்ற 23 வயதுடைய அழகிய பெண்ணொருத்தி, தனக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு குறித்து புகார் அளிப்பதற்காக மகாரகாமவில் பொலிஸிற்குச் சென்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.

'உனக்கு நான் உணவு ஊட்டிவிடுகிறேன்....உன் குளிப்பாட்டி விடுகிறேன்... நீ எனக்கு வேண்டும் தங்கமே!' என்று முறைப்பாடு செய்ய வந்த பெண்ணிடம் பசப்பு வார்த்தைகளைக் கொட்டி, பாலியல் இலஞ்சியம் கோரியதாகத் தெரியவருகின்றது.

பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் கூறிய பாலியல் சார்ந்த விடயங்களை குறித்த பெண்மணி தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளார். அதனை மேல் மாகாண தெற்கு டி.ஐ.ஜி வசந்தா விக்ரமசிங்கவிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

அவர் பதிவுசெய்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஏ.எஸ்.பி ஒரு நீண்ட விசாரணையை நடத்தியுள்ளார், மேலும் சிறப்பு புலனாய்வு பிரிவின் ஓ.ஐ.சி அந்தப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் வாங்கியதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வசந்த விக்கிரமசிங்க, சென்ற 7 ஆம் திகதியிலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரை பதவியை இரத்துச் செய்துள்ளார்.

Last modified on Monday, 16 December 2019 01:41