ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவ போராட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், கரு ஜயசூரியவை கட்சியின் தலைவராக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ, கட்சியின் தலைமைத்துவ பதவியோ தனக்கு வேண்டாம் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துவிட்டார் என்று ஐக்கிய பிக்கு முன்னணியின் செயலாளர் நிநியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக, சஜித் பிரேமதாஸ 260 மில்லியன் ரூபாய் கடன் பட்டுவிட்டார். அக்கடனை அடைப்பதற்கே, அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிராமங்களுக்கு செல்வதற்கு முடியாத தொகுதி அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு, அவ்வாறு செல்ல முயல்பவர்களுக்கு சந்தரப்பம் அளிக்கப்படும் என கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.