web log free
November 28, 2024

திருமணத்துக்கு போகவேண்டும்- பூஜித

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தன்னுடைய மகனின் திருமணத்துக்கு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தார்.

அதற்கான, அனுமதியை நீதிமன்றத்தினால் வழங்கமுடியாது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சிறைச்சாலைகள் ​ஆணையாளருக்கு அறிவுறுத்துவதாக அறிவித்தது.

பூஜித ஜயசுந்தரவின் மகனின் திருமணம், 2020 ஜனவரி மாதம் 03 ஆம் திகதியன்று, கொழும்பு கங்காராம விஹாரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd