விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தன்னுடைய மகனின் திருமணத்துக்கு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தார்.
அதற்கான, அனுமதியை நீதிமன்றத்தினால் வழங்கமுடியாது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவுறுத்துவதாக அறிவித்தது.
பூஜித ஜயசுந்தரவின் மகனின் திருமணம், 2020 ஜனவரி மாதம் 03 ஆம் திகதியன்று, கொழும்பு கங்காராம விஹாரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.