web log free
April 15, 2026

பழைய தொழில் செய்த 12 பேர் கைது


வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், விபசார விடுதியொன்றை நேற்றிரவு சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், அங்கிருந்த 12 பெண்கள் உட்பட 14 பேரை கைதுசெய்துள்ளனர்.

அவர்களில் இருவர், ஆண்கள் என்றும், அதிலொருவர் விடுதியின் முகாமையாளர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அனைவரையும் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

பெண்கள், நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைவரும் 24 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd