மாவனெல்ல, வத்தளை மற்றும் கொழும்பில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வர்த்தக நிலையங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக, எவ்விதமான உயர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பு-2 கொம்பனி வீதி, ஸ்ரீ ஜினரத்ன மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தீயணைப்பு படைபிரிவு சேவைகள் திணைக்களத்தின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
வத்தளையில் பழைய கார்போட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் காட்போட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
அந்த தீயையும் கண்டுப்படுத்துவதற்கு, கொழும்பு தீயணைப்பு வாகனங்கள் இரண்டே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மூன்று தீ விபத்துக்களுக்குமான காரணங்கள் எவையும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.