web log free
June 24, 2026

கைதி சுட்டதில் கைதிக்கு காயம்

வாரியபொல சிறைச்சாலையில் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி, மற்றுமொரு கைதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சிறைக் கைதி தற்போது குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd