web log free
May 02, 2024

“மிஸ் கோல்” வந்தால் கவனம்! கவனம்!

தங்களுடைய கையடக்க தொலைபேசி அல்லது ஏனை தொலைபேசிகளுக்கு “மிஸ்கோல்” வந்தால்,மிகமிக கவனமாக இருக்குமாறு, இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவித்துள்ளது.

மிஸ் கோல், கொடுத்து மோசடிகளில் ஈடுபடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அந்த சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மத்திய கிழக்கு நாடுகள், இந்தியாவிலிருந்தே மிஸ்கோல் கொடுத்து, இவ்வாறான முறைக்கேடுகள், மோசடிகள் முன்னெடுக்கப்படுகின்ற என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆகையால், +94 / 0094 என்ற இலக்கத்தில் வரும் மிஸ்கோல்களுக்கு மட்டுமே, மீளவும் அழைப்பை ஏற்படுத்தி உரையாடலாம். என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(+24 /+91 /+96 /+22 /+90 /+97 /+33 /+92 /041/ +92 /+81 /+21/+25 /+60 /+25) ஆகிய இலக்கங்களிலிருந்து வரும் மிஸ் கோல்களுக்கு எக்காரணத்தை கொண்டும், மீளவும் அழைப்பை எடுப்பதை, அல்லது அவ்வாறான இலக்கங்களிலிருந்து வரும் கோல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் இலங்க தகவல் தொழில்நுட்ப சங்கம், இலங்கை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்க தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிதுரு குருவிட்டவே அறிக்கையை வெளியிட்டு, அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.