web log free
February 08, 2026

15,000 போதை குளிசைகளுடன் இளைஞன் கைது


15,000 போதையூட்டும் குளிசைகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சம்மாந்துரை இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து சம்மாந்துரைக்கு பயணித்துகொண்டிருந்த, சொகுசு பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த போதே, அவ்விளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடமிருந்து போதையூட்டும் குளிசைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்வேறு நோய்களுக்கான, வலிநிவாரணியாகவே இந்த போதையூட்டும் குளிசைகள் விற்பனைச் செய்யப்படுவதாக விசாரணைகளிலிருந்து அறியமுடிந்துள்ளது எனத் தெரிவித்த சம்மாந்துரை பொலிஸார், இளைஞனிடம் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd