web log free
December 15, 2025

“ரணிலை கைது செய்யவும்”

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்த வேகத்திலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியின் பெரிய மூளையாக செயற்பட்ட ரணிலை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  நளிந்த ஜயதிஸ்ஸவே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.  ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் ரணிலை கைது செய்யுமாறும் அவர் கோரியுள்ளார். 

ரணிலை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதன் ஊடாக பல்வேறான, சம்பவங்கள் அம்பலத்துக்கு வரும், அது ஏனைய மோசடி காரர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.

அதுமட்டுமன்றி, ரணிலுடன் இணைந்த ஏனைய பெரும் கள்ளர்களும் வெகுவிரைவில் அகப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Last modified on Wednesday, 25 December 2019 05:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd