web log free
December 17, 2025

பிள்ளையானுக்கு விரைவில் விடுதலை-கருணா

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(20) மாலை மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் பொதுமகன் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

திருகோணமலையில் எங்கள் கட்சியின் கட்டமைப்பு முன்னெடுக்கப்படுகிறது.முன்னாள் முதல்வர் பிள்ளையானை விடுதலைக்கு பலமுயற்சிகளை மேற்கொள்பவன் நான்.நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது தான் இலக்கு என குறிப்பிட்டார்.

கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவொன்று காணப்படும். பிள்யைான் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என கருணா அம்மான் நம்பிக்கை தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd