web log free
November 28, 2024

ஒரே பார்வையில் வெள்ளத்தின் தாண்டவம்

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் அடைமழையால், ஆங்காங்கே பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள. வெள்ளத்தில் சிக்குண்டிருந்த பலர் காப்பற்றப்பட்டுள்ளனர். உஷார் நிலையில் இருக்கும் படையினர், பெல் ஹெலிகள் மூலமாகவும் மக்களை மீட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த பஸ்ஸையும் பொலிஸாரும் படையினரும் இணைந்து மீட்டுள்ளனர். 

வெள்ளத்தின் தாண்டவத்தை ஒரே பார்வையில் பார்ப்போம்

1. கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நாவுல பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியது

2. 7565 குடும்பங்களைச் சேர்ந்த 26492 பேர் பாதிப்பு 

3. இதுவரையிலும் மூன்று பேர் மரணம் 6 பேரை காணவில்லை

4. 47 வீடுகள் முழுமையாக சேதம், 1007 வீடுகள் பகுதியளவில் சேதம் 

5. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 6 சேதமடைந்தன. 

6. பாதுகாப்பான அமைவிடங்கள் 9, அதில்  3314 குடும்பங்களைச் சேர்ந்த  11916 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

7. கலாவெ வாவி குறித்து எச்சரிக்கை- அவசர கதவை திறக்கமுடியாது. 

8. மலையத்துக்கான ரயில் சேவைகள் பண்டாரவளை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

9. மகாவலி கங்கையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

10 பராகிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்தமையால், 10 கதவுகளில் 4 கதவுகள் திறக்கப்பட்டன. 

11. ஹப்புத்தளை, கஹாகொல்லயில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். 

12. பதுளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 7 பிரிவுகளில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை 

13. பொத்துவில்-பானம வீதி வெள்ளத்தில் மூழ்கியது. 

14. பொலன்னறுவை- மட்டக்களப்பு வீதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  

15. இராஜாங்கனை வயல் பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது. 

16. காசல்ரீ- மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரும் அபாயம்.  

17. பதுலுஓயா பெருக்கெடுத்தது. 

18. மாத்தளையில் 81 குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லை. 

19. திம்புலாகலையில் வயல்பாதுகாப்பில் இருந்த இருவர் வெள்ளத்தில் சிக்குண்ட நிலையில் மீட்பு

20. ஏழு நாட்களுக்குப் பின்னர், பதுளை, மஹிங்கனை, வியலு பகுதியில் சூரியன் தென்பட்டது.  

21. புத்தளம்-அநுராதபுரம் போகுகுவரத்தில், மீ ஓயா பாலத்துக்கு அருகில் சிக்கல். 

22. பொலன்னறுவை கல்லேல்லையில் 54 பயணிகளுடன் வெள்ளத்தில், சிக்கியிருந்த பஸ், மீட்கப்பட்டது. அதில், சின்னக் குழுந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிப பெண்களும் இருந்தனர்.

23.மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் திடீ​ர் வௌ்ளப்பெருக்கில் சிக்குண்ட 21 ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணிகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். 

Last modified on Sunday, 22 December 2019 00:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd