வெலிக்கடைக்கு சிறைச்சாலைக்கு இலக்கத் தகடு இல்லாத காரொன்று சென்றிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காரில் சென்றவர் அல்லது சென்றவர்கள் யாரென கண்டறியப்படவில்லை. யார் சென்றனர் அல்லது யாரை பார்க்க சென்றனர் என்பது தொடர்பில் சரியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அதில் சென்றவர் முக்கிய புள்ளியாவர். அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை பார்வையிடுவதற்காக இலக்கத்தகடற்ற கார் ஒன்று நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளது.
இதேநேரம் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய சம்பிரதாய முறையினை பொலிஸ் குற்றவியல் பிரிவினர் கடைப்பிடிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.
இதன்பிரகாரம் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காரில் சபாநாயகர் கரு ஜயசூரிய பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த காரில் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதமுனி சொய்சா சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவிக்கொண்டுள்ள விஜிதமுனி சொய்சா கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சர்களை விமர்சிப்பதில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவராவார்.