அங்கவீனமடைந்த இராணுவத்தினர், மரணமடைந்த இராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்வோருக்கு 55 வயது வரையிலும் வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிர்வாழும் வரையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
நடவடிக்கை கடமைகளின் போதும், பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அல்லது சட்டரீதியான செயற்பாடுகள் காரணமாக அல்லது வேறு நடவடிக்ககைகளின் போது அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்கு இவ்வாறு உயிர்வாழும் வரையிலும் சம்பளம் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இதுதொடர்பிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.