முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையை சற்றுமுன்னர் பிறப்பித்தது .
கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இந்த பிடியாணையை பிறப்பித்தார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள.
இதனடிப்படையில், சி.ஐ.டியினரால், ராஜித சேனாரத்ன எம்.பி, எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம். அவரை கைது செய்வதற்காக, சி.ஐ.டியினர் கொழும்பிலும் களுத்துறையிலும் வலைவிரித்துள்ளனர் என அறியமுடிகின்றது.