முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், சிங்கள-பௌத்தர் அல்லாதவர் என்பதனால், அவரை பிரதமராக நியமிக்கவேண்டாம் என, பௌத்த சங்கத்தினருடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் நான் வலியுறுத்தினேன்.
அது நான் செய்த தவறாகும் என, முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
அந்த தவறினால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆனார், அவ்வாறான தவறை நான் செய்திருக்காவிடின், பிரதமராகும் சந்தர்ப்பம் மஹிந்தவுக்கு கிடைத்திருக்காது என்றும் கூறினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.