web log free
June 25, 2026

ராஜிதவை கைது செய்வதில் பலன் இல்லை-சுமந்திரன்

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னால் ராஜித சேனாரத்ன நடத்திய ஊடக சந்திப்பில் சொல்லப்பட்ட வெள்ளை வான் தகவல்கள் தொடர்பாக விசாரணை செய்யாமல், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்த நபரை விசாரணை விசாரிப்பது பிரச்சினைக்குரியதாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளரும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "வெள்ளை வான் என்பது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான பிரச்சினை. யாராவது வந்து அது தொடர்பாக தனக்கு தொடர்புள்ளது என்று கூறினால் அது பற்றி தேடிப்பார்க்க வேண்டும். ஊடக சந்திப்பை நடாத்திய அரசியல்வாதியை கைது செய்து பலன் இல்லை." என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd