web log free
May 09, 2025

கருணாவை கொல்ல சதி: 4 பேர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்  வலதுகரமாகவும், கிழக்கு மாகாண கட்டளை தளபதியாகவும் இருந்த கருணா அம்மன் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்களில் இருவர் முன்னாள் புலிகள் என்பதுடன் அவர்களிடமிருந்து ரி56 ரக ஆயுதம் ஒன்றும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மலேசியாவில் இருந்து இயங்கும் கும்பல் ஒன்றினால், அந்த குழு இயக்கப்படுவது ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

திரு கோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் கையளிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Last modified on Tuesday, 31 December 2019 03:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd