web log free
May 02, 2024

“அடைக்கலம் கொடுத்தவரை புடித்து அடைக்கவும்”

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜிதவை மறைத்து வைத்து உதவி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்திலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜிதவை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இரண்டு நாள்களிலும் அவர், நாட்டின் முன்னாள் தலைவியின் வீட்டில் மறைந்திருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே, ராஜிதவுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு எதிராக, தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ராஜபகஷ குடும்பத்தையே, சிறையில் அடைக்கவேண்டும் என கடந்த காலங்களில் பரவலாக பிரசாரங்களை மேற்கொண்டு வந்தவர், ராஜித சேனாரத்ன ஆவார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

நாட்டில் குழுப்பகரமான நிலைமையொன்றை உருவாக்குவதற்கு, அவர் போலியான பிரசாரங்களையும் மேற்கொண்டு வந்திருந்தார் என்றும் அமை்சசர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.