வௌ்ளைவான் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றமே, மேற்கண்டவாறு பிணை வழங்கியுள்ளது.
மேற்படி விவகாரம் தொடர்பில், கடந்த 24ஆம் திகதியன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும், 27ஆம் திகதி வரையிலும் அவர் கைதுசெய்யப்பட்டவில்லை.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், 27ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சென்றிருந்த நீதவான், அவருரை டிசெம்பர் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துசெல்வதற்கு, சிறைச்சாலை அதிகாரிகள், நேற்று (30) முயற்சித்தனர். எனினும், அது கைகூடவில்லை.
இன்று (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபோதே, மேற்கண்டவாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.