ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலைக்கு இதுவரையிலும் முடிவுகாணப்படவில்லை.
அந்த முறுகல் முற்றிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ரணில் தலைமையில் நேற்று நடைபெற்ற முதலாவது சந்திப்பை சஜித் பிரேமதாஸ புறக்கணித்துவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை போக்குவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் இருவரையும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும், சஜித் பிரேமதாஸ, இரண்டு தடவைகளும் அந்த சந்திப்புகளுக்கு செல்லவில்லை.
இந்லையில் நேற்றைய கூட்டத்துக்கும் செல்லவில்லை.
இதேவேளை, தங்களுடைய கோரிக்கையின் பிரகாரம் சஜித் பிரேமதாஸவுக்கு கட்சியின் தலைமைப் பதவியை வழங்காவிடின், அடுத்தத் தேர்தலில் சஜித் தலைமையில் புதிய கூட்டணியை அமைத்து களமிறங்குவோம் என ஹரின் பெர்ணான்டோ எம்.பி தெரிவித்துள்ளார்.